பா.ஜ.க. முதலமைச்சர்களும், அதன் ஆதரவு முதலமைச்சர்களும் ஒரே அச்சில் வார்த்தவர்களாக இருப்பார்களோ அல்லது இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இப்படித்தான் சிறப்பு பயிற்சி அளித்துள்ளதா என்று தெரியவில்லை.
புதுச்சேரி முதலமைச்சர் (பிஜேபி கூட்டணி) – மழைநீர் அதிகம் வடியவில் லையே என்ற கேள்விக்கு அளித்த பதில்,
*அமாவாசை என்பதால் வெள்ள நீர் வடிவதில் தாமதம் என்கிறார்.
அரியானா மாநில முதலமைச்சர் நயாப்சிங் சோனியிடம் பசுமாட்டிற்காக அப்பாவிகள் கொல்லப்படுவது குறித்துக் கேட்டால்,
*கிராமத்தவர்கள் என்பதால் பசு வைத் தாயாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக சில நேரங்களில் பசுவைக் கடத்துபவர்கள் என்ற தகவல் கிடைத்த உடன் ஆத்திரத்தால் கொலை செய்துவிடுகிறார்கள் என்கிறார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவிடம் மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது,
*பெண்கள் ஆண்களின் கட்டளை களை மீறும்போது சில நேரங்களில் ஆண்கள் கோபம் கொள்கின்றனர் என்கிறார்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் இந்தியர்கள் தானே – அவர்கள் மீது ஏன் தேர்தல் பரப்புரையின்போது அவதூறு சுமத்துகிறீர்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹெமந்த விசுவா சர்மாவிடம் கேட்ட கேள்விக்கு,
*இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால் ஹிந்து கலாச்சாரப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறார்.
மேலே கூறிய பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்களும், அதன் ஆதரவு முதலமைச்சர்களும் யாருமே மக்களுக்காக சிந்தித்துப் பேசவே இல்லை. போகிறபோக்கில் பேசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் கடும் இன்னல்களைச் சந்திப்பது மக்கள் தானே!
ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கே.எஸ். சுதர்சன் இவ்வாறு கூறியிருந்தார்.
‘‘பூர்வீகத்தில் தாங்கள் ஹிந்துக்கள் என்ற கருத்ைத முஸ்லிம்களும், கிறிஸ்த வர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என்று பேசியதுண்டே! (‘தினமணி’ 16.10.2000)
அந்த ஆர்.எஸ்.எஸ். வழியில்தான் பிஜேபியைச் சார்ந்த முதலமைச்சர்களும், பி.ஜே.பி. பிரமுகர்களும் இப்பொழுதும் கடைந்தெடுத்த மத வெறியர்களாக உளறிக் கொட்டிக் கொண்டு இருக் கிறார்கள்.
மக்கள் மத்தியில் இந்தப் போக்கை அம்பலப்படுத்த வேண்டியது மதச் சார்பற்ற சக்திகளின் முதலாவதான கடமையாகும்.