பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியாளர் சோம.நீலகண்டனின் மாமனாரும், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் நீ.தேவி மற்றும் நீ.கண்ணன் ஆகியோரின் தந்தையுமான பேராவூரணி ஒன்றியம் பாலகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த சி.செல்லையா உடல் நலக்குறைவால் 30.11.2024 அன்று இரவு 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
– – – – –
மயிலாப்பூர் – பகுத்தறிவாளர் ஜெகதீசன் இணையர் வடுவம்மாள் ஜெகதீசன் (வயது 84) நேற்று (2.12.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாளை (4.12.2024) காலை 9 மணிக்கு 8, 2ஆம் சந்து, அப்பு தெரு, மயிலாப்பூர், சென்னை – 4 இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.