வாரணாசியில் (காசி) உள்ள காலபைரவர் கோயிலுக்குள் வைத்து மாடல் ஒருவர் பர்த்டே கேக் வெட்டி கொண்டாடிய காட்சிப் பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மமதா ராய் என்ற அவர், இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். அவர் காலபைரவர் கோயிலுக்கு வந்து பூஜை செய்தபிறகு கேக் வெட்டி, சாமிக்கு படைத்தார். காட்சிப் பதிவு வைரலாகவே, கோயில் ‘புனித’த்துக்கு எதிராக அவர் நடந்து கொண்டதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.