திருவாரூர் புலிவலம் நினைவில் வாழும் பெரியார் பெருந்தொண்டர்கள் மானமிகு எஸ்.எஸ். மணியம் – ராஜலட்சுமி ஆகியோரின் மூத்த மகனும் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும், திருவாரூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத் தலைவரும், திருவாரூர் ரோட்டரி சங்க மேனாள் தலைவரும், திருவாரூர் வளர்ச்சி ஆலோசனைக் குழும பொருளாளரும், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் – ஆசிரியர் கழகத் தலைவருமான, மானமிகு எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி அவர்களின் தந்தையாருமான எஸ்.எஸ்.எம். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (வயது 81) சிறிது காலம் நோய் வாய்ப்பட்டு இருந்து இன்று 03.12.2024 காலை 9 மணி அளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். சுயமரியாதைக் கொள்கையில் அழுத்தமானவர் – கொள்கை ஆர்வலர்!
நாளை (04.12.2024) புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருவாரூர் புலிவலம் தெற்கு வீதி அவர்களது இல்லத்தில் இருந்து அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக வழங்கப்படும்! மறைந்தாலும் தனது உடல் மாண வர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நிலையும், ஏற்பாடும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அவரது பிரிவால் துயரத்திற்கு ஆளாகியி ருக்கும் அவரது மகன் நமது எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்திக்கும், வாழ்விணையருக்கும், குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண் பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
3.12.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்