அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், கோவி. செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், அசோக்குமார் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, வன்னியரசு ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பிரபல தொழிலதிபரும், திருவள்ளுவர் சிலையை உலகம் முழுவதும் நிறுவும் பணியில் தொண்டாற்றி வருபவருமான வி.ஜி. சந்தோஷம்
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, கவிதைபித்தன் (தி.மு.க.), ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச். அசன் மவுலானா, ராசா. அருண்மொழி (தி.முக..), மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திருமுருகன் காந்தி – மே 17 இயக்கத் தோழர்கள், மேனாள் நீதியரசர் ஏ.கே. ராஜன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.