சுயமரியாதைச் சுடர் அணையவிடாமல் காக்கின்ற அரிமா.
பகுத்தறிவுப் பரப்புரை தொடர்ந்து நிகழ்த்தும் ஆசான்.
சகோதரப் பாசத்துடன் அனைவருடனும் பழகும் மேன்மையாளர்.
ஆசிரியர் அவர்களுக்கு இன்று (2.12.2024) 92ஆவது பிறந்த நாள்.
வாழிய நற்றமிழ் போல்! வாழிய பல்லாண்டு!
தோழமை வாழ்த்துகளுடன்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
– – – – –
தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன் வாழ்த்து
92ஆவது பிறந்த நாள் காணும் தாங்கள் மேலும் பல்லாண்டுகள் உடல் நலச் செறிவுடன் சுயமரியாதைச் சுடரை ஏந்தி தந்தை பெரியாரின் தொண்டு தொடர மிக்க புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்.