புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக் கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில் நமது உள்ளத்தில் எவையெவை பதிக்கப்பட்டு விட்டனவோ அவையெல்லாம் -_ தேர்ந்த ஞானிகளாலும் அவதார புருஷர்களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடன் புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், புதிய நோக்கங்களையும், தோற்றங்களையும் காணச் சகிக்காதவர்களாக நாம் இருக்கின்றோம்.
(‘குடிஅரசு’ 20.9.1931)