வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 27.11.2024 அன்று திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் மோ. கோமதியிடம் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு, ந.தேன்மொழி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன், குடியேற்றம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் ஆகியோர் தந்தை பெரியாரின் படத்தை வழங்கினர். இந்நிகழ்வின்போது முனைவர் வே.வினாயகமூர்த்தி உடனிருந்தார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டது
Leave a Comment