முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
சென்னை, டிச.3 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளையொட்டி (2.12.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
‘‘தமிழினம் விழிப்புறவும், பகுத்தறிவால் மேன்மை யுறவும் நாளும் தன் பரப்புரைத் தொண்டறத்தை மேற்கொண்டு வரும் பெரியாரின் பெருந்தொண்டர், தாய்க்கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழினத்தின் அரணாக விளங்கும் பெரியாரியக் கொள்கைகளை நாளும் சமுதாயத்தில் விதைத்திடும் ஆசிரியர் வாழிய பல்லாண்டு!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.