கோலாலம்பூர், ஜூலை 24 மூன்று நாள்களாக மலேசியா பல்கலைக் கழகத்தில் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது. உலகின் பல நாடுகளிலிருந்தும், அறி ஞர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பட்ட தமிழ் ஆய்வாளர் களும் கலந்து கொண்டனர். ஏறக் குறைய 1500 பேருக்கு மேற்பட் டவர்கள் பங்கேற்ற மாநாட்டினை வெகு சிறப்பாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, ஆதரவு நல்கி நடத்திட்ட பெரு மக்களை தமிழர் தலைவர் மாநாட்டின் நிறைவு நாளில் (23.7.2023) நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
பேராசிரியர் த. மாரிமுத்து
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவரும், தமிழ்ப் பேராசிரியருமான டான்சிறீ த. மாரிமுத்து அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டு தெரிவித்தார். மாநாட்டு ஏற்பாட்டில் பல திசை திருப்பங்கள், தடங்கல்கள், நிகழ்ந்தாலும் அவைகளையெல்லாம் திறம்பட நேர்கொண்டு, களைந்து மாநாடு வெற்றி பெற முதற் காரணமாகத் திகழ்ந்தவர் டான்சிறீ பேராசிரியர் த. மாரிமுத்து அவர்களாவார். மாநாட்டிற்கு மலேசிய அரசின் ஆதரவினையும், மலேசியப் பிரதமர் டத்தோசிறீ அன்வர் இப்ராகிம் அவர்களின் வழிகாட்டுதலையும் பெற்றுத் தந்ததில் பேராசிரியர் அவர் களுக்குப் பெரும்பங்கு உண்டு. அனைவரையும் அழைத்து விருந்தோம்பி, மாநாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக நடத்திய பேராசிரியருக்குப் பாராட்டினையும் நன்றியினையும் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சந்தித்துக் கூறினார்.
ஓம்ஸ் அறக்கட்டளை தியாகராஜன்
மலேசிய நாட்டு சீரிய சமூக ஆர்வலரும், ஓம்ஸ் அறக் கட்டளையின் நிறுவனத் தலைவரும் ‘தமிழ் மலர்’ நாளேட்டின் வெளியீட்டாளருமான பெருமதிப்பிற்குரிய தியாகராஜன் அவர்களை நேரில் சந்தித்து பட்டாடை அணிவித்து பாராட் டுதலை தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்தார். ஒரு மாபெரும் பணியினை மிகவும் அமைதியாக செய்து காட்டிய சீலராக தியாகராஜன் திகழுகிறார். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய் வாளர்கள் பங்கேற்றது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் வகையில் தமிழ்ப் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் களுக்கு தங்கப் பதக்கம் வழங்கிட ஏற்பாடு செய்ததோடு – சாதனை புரிந்த மாணவர்களை உற்சாகப்படுத்திடும் வகையில் மலேசிய நாட்டுப் பிரதமர் டான்சிறீ அன்வர் இப்ராகிம் அவர் களே தங்கப் பதக்கத்தினை அணிவித்திடும் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியையும் ஏற்படுத்தியவர் தியாக ராஜன் அவர்கள்.
மேலும் ‘தமிழ் மலர்’ நாளேட்டினை தொடர்ந்து நடத்தி வருபவரும்கூட – ஒரு நாளேட்டை நடத்துவது ஒரு எளிய, இயல்பான செயலாக இருக்க முடியாது. பல்வேறு சமூகப் பணி களுக்குமிடையே ‘தமிழ் மலர்’ நாளேட்டினை நடத்தி, மாநாடு பற்றிய செய்தியை முதலில் தொடங்கி நிறைவுரை வரை பதிவாக்கி ஆவணப் படுத்தியதில் அளப்பரிய பங்காற்றிய ஓம்ஸ் அறக் கட்டளையின் தலைவர் தியாகராஜன் அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியினையும் தமிழர் தலைவர் தெரிவித்தார்.
மாநாட்டு ஒருங்கிணைப்புச் செயலாளர் நந்தன் மாசிலாமணி
சென்னையிலிருந்து மாநாட்டு ஏற்பாடுகளை செய்ததோடு பேராளர்களின் தொடர்பினை ஏற்படுத்துவதில் தொடர்ந்து பாடுபட்டவர் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் செயலாளர் நந்தன் மாசிலாமணி அவர்கள். பல தரப்பட்ட நிலையிலுள்ள பேராளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் பலரையும் – உரிய தகவல்களை வழங்கி – அவர்களது பயணம், கோலாலம்பூரில் தங்குமிடம் ஆகிய பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டவர். இந்தியா மற்றும் பிற நாடுகளிலுள்ள பேராளர்களையும் பங்கேற்கச் செய்ததில் மாநாட்டின் வெற்றியில் நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த பங்கு உண்டு. அனைவரது பாராட்டுதலுக்கும் உரியவர் என்று கூறி தமிழர் தலைவர் அவர்கள் நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.