தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை!
எனது 92 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு, பல இயற்கைப் பேரிடர் ஆய்வு என்ற பெரும் சுமையான நெருக்கடியிலும், நேற்று (2.12.2024) காலை நேரில் வீட்டிற்கு வந்து மிகுந்தபாசத்துடன் வாழ்த்துக் கூறிய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,அமைச்சர் பெருமக்கள், அன்புள்ளம் கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கொள்கை உறவுகள், தமிழாய்ந்த பெரு மக்கள், பெருங்கவிஞர்கள், கட்டுரைகள், கவிதைகள், காணொலிமூலம் கருத்துக் கூறி ஊக்கமூட்டிய கல்விச் சான்றோர்கள், ஊடகவியலாளர்கள், கல்விக் குடும்பத்தினர், கெழுதகை நண்பர்கள், புலம் பெயர்ந்த தமிழ்த் திராவிடத் தோழர்கள், குடும்பங்கள், இயக்கப் பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் ஆகிய அத்துணைப் பேருக்கும் எனது கனிவு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
‘‘எதற்காக என்னை இவ்வாறு ஊக்கப்படுத்தினீர்களோ’’ அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி, உங்களின் எதிர்பார்ப்பை நியாயப்படுத்திட, நித்தமும் உண்மையாக உழைத்திடுவேன் என்று உறுதியும் கூறுகிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.12.2024