அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
![தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2024] கி.வீரமணி, வாழ்த்து](https://viduthalai.in/wp-content/uploads/2024/12/20-1.jpg)
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெற்றிசெல்வி ஆகியோர் தமிழர் தலைவருக்கு விடுதலை சந்தாக்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். *அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, ராஜீவ்காந்தி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
![தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2024] கி.வீரமணி, வாழ்த்து](https://viduthalai.in/wp-content/uploads/2024/12/21-1.jpg)
![தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2024] கி.வீரமணி, வாழ்த்து](https://viduthalai.in/wp-content/uploads/2024/12/24-1.jpg)
![தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2024] கி.வீரமணி, வாழ்த்து](https://viduthalai.in/wp-content/uploads/2024/12/22-1.jpg)
அன்பில் மகேஸ் பொய்யா
மொழியின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து புத்தகத்தை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
![தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2024] கி.வீரமணி, வாழ்த்து](https://viduthalai.in/wp-content/uploads/2024/12/25-1.jpg)
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
![தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2024] கி.வீரமணி, வாழ்த்து](https://viduthalai.in/wp-content/uploads/2024/12/26-1.jpg)
சுயமரியாதை சுடரொளி அரங்கசாமி – ராசம் குடும்பம் சார்பாக ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1,00,000த்தினை மருத்துவர் மீனாம்பாள், பொறியாளர் சாமிநாதன், ஆடிட்டர் ராமச்சந்திரன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி வழங்கினர்.
