கோவிலூர், டிச. 2- 30.11.2024 அன்று மாலை உரத்தநாடு தெற்கு ஒன்றியம் கோவிலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழா ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் ரெ.சதீசுகுமார் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.
ப.சுப்பையா வரவேற்புரையாற்றி னார். ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், பகுதி செயலாளர் வீர.இளங்கோவன், இராதா சதீசுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
ஒன்றிய கழக துணைச் செயலாளர் நெடுவை.கு.லெனின், ஒன்றிய துணைத்தலைவர் நெடுவை.கு.நேரு, ஒன்றியத்தலைவர் த.செகநாதன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், நிறைவாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் தமிழர் தலைவரின் பண்பு நலன்களை விளக்கியும், ஒப்பற்ற ஆசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டர்களாக பணியாற்றுவதின் பெருமையினை யும் எடுத்துரைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.
ஆசிரியர் இளவயது முதல் இன்றுவரை இன மான தொண்டாற்றி வரும் சிறப்பினைக்கூறி புதிய இளைஞர்கள் மாணவர்களுக்கு பயனாடை போர்த்தி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் பாராட்டு தெரிவித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் “வாழ்வும்-தொண்டும்” என்ற தலைப்பில் கழகப்பேச்சாளர் ஆரூர்.தேவ.நர்மதா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கரம் பிடித்து வளர்ந்த தமிழர் தலைவர் தம் பேச்சால்,எழுத்தால் அறிவா சான் அய்யாவின் கொள்கையினை உலமயமாக்கிவரும் பேருழைப்பை விளக்கிசிறப்புரையாற்றினார்.
பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன் இணைப்பு ரையாற்றினார். இறுதியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாணவர் ச.திநிசன் நன்றி கூறினார்.
பொறியாளர் ப.பாலகிருட்டிணன், பேரா.குட்டிமணி, தஞ்சை மாநகர இளைஞரணி தலைவர் அ.பெரியார்செல்வம், ஒக்கநாடு மேலையூர் கழகப்பொறுப்பாளர்கள் க.மாணிக்கவாசகம், நா.வீரத்தமி ழன், ம.இரகு, பெரியார் பிஞ்சுகள் கு.இசைப்பிரியா, கு.மகிழ்நன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.