தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி தந்தை பெரியார் சிலைக்கு இன்று (2.12.2024) திங்கள் காலை மாலை அணிவித்து இனிப்பு வனழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மன்னார்குடி நகராட்சி NULM திட்டத்தின் கீழ் . செயல்படும் நேசக்கரம் பராமரிக்கும் மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது இரு நிகழ்விலும் மாவட்ட ஒன்றிய நகர திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர் ஆதரவற்றோர் இல்லத்தை நிர்வகித்து வரும் நேசக்கரம் கோபால் அவர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டினை தொடர்ந்து 92 வயதி லும் சிறப்பாக தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகளை விளக்கி உரையாற்றினார் இரு நிகழ்விலும் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுயமரியாதை நாள்: தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு ஆதரவற்றோர் இல்ல முதியோர்களுக்கு சிற்றுண்டி வழங்கல்

Leave a Comment