தமிழ்நாட்டில் இன்று பெண்கள் கல்வியறிவு, பதவிகள், பொறுப்புகள் என்று சிறந்து விளங்குகின்றார்கள். இப்பொழுது நமது பெண்களைப் பார்க்கும்போது அவர்களது அருமை யான பேச்சுகள், எழுத்துகள், கவிதைகள் எல்லாம் நம்மை மிகவும் பெருமைப்பட வைக்கின்றன.
இவ்வளவு சிறந்து விளங்குவதில் நமது ஆசிரியர் அய்யாவின் உந்துதல் முக்கியப் பங்காற்றியது அனைவரும் உணர்ந்ததே. ஆயிரமாயிரம் மகளிர் இன்று பெருமை அடைந்துள்ளதை நினைத்து, அவர் உண்டாக்கிய கல்வி நிறுவனங்களில் பயின்று உலகெங்கு முள்ள மகளிர் மகிழ அவருக்குப் பட்டம் வழங்க விரும்பு கின்றோம்.
1938இல் அன்றிருந்த அறிவுசால் மகளிர் ”பெரியார்” பட்டம் கொடுத்தனர். அவர்கள் வழித் தோன்றல்களான நாம் அவ்வளவு சிறந்த பட்டத்தைத் தேடினோம். “பகுத்தறிவுப் போராளி” தான் நமக்குக் கிடைத்தது. ஆசிரியர் என்பதை விடச் சிறந்த பட்டம் இல்லை என்றாலும் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டத்தை மிக்க மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் அளித்துப் பெருமைப்படுகின்றோம்.
(பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் 12.12.2021 அன்று நடைபெற்ற உலக திராவிட மகளிர் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம்).