தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு தாய்க்குலத்திற்கு செய்வது என்ன – பெருங்கேடு அல்லவா?

2 Min Read

மக்களவை உறுப்பினர் கனிமொழி

அரசியல்

சென்னை, ஜூலை 24- தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறையைக் கண் டித்து, திமுக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (23.7.2023) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செய லாளர் கனிமொழி தலைமை வகித் தார். இதில், மக்களவை உறுப் பினர்கள் தமிழச்சி தங்கபாண் டியன், கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் நா.எழிலன், தி.மு.க. மகளிரணித் தலைவர் விஜயா தாயன்பன், செயலர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணிச் செயலர் நாமக்கல் ராணி, மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, சென்னை மேற்கு மாவட் டச் செயலர் நே.சிற்றரசு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசியதாவது:

மணிப்பூர் கலவரமும், வன் முறையும் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன. கோயில், தேவாலயங்கள் உடைக்கப்பட் டுள்ளன. கிராமங்கள் பற்றி எரி கின்றன, பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் மணிப் பூர் சென்றபோதும், அமைதி ஏற்பட வில்லை.

நமது பிரதமரோ வெளிநாடு களுக்கு பயணம் மேற்கொண்டு, தலைவர்களை சந்தித்துப் பேசி, இந்தியாவில் மதக் கலவரங்கள் இல்லை, மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்று பொய் சொல்லிக் கொண்டிருந்தார்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளான காட்சிப் பதிவு வெளியான பிறகுதான், பிரதமர் மவுனத்தைக் கலைத்தார். அப்போதும் நாடாளு மன்றத்துக்குள் வந்து, பேசத் தயா ராக இல்லை. ஜனநாயகத்தை அவ மதிக்கும் வகையில், நாடாளுமன் றத்தின் வெளியே மட்டும் பேசி னார் பிரதமர்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை. ஒவ்வொரு நாளும் `பாரத் மாதா கி ஜே’ என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் எந்த மாதா வைக் காப்பாற்றுகிறார்கள். மணிப் பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாய் மார்கள் இல்லையா? பெண்ணை மதிக்கத் தெரிந்த சமூகத்தை உருவாக்குவதுதான் ஆட்சியாளர் களின் கடமை.

ஆனால், இது பாஜகவினருக்குப் புரிவதில்லை. பெண்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்று கருதும் அரசும், நடந்ததை தெரிந்து கொள்ள அக்கறையில்லாத அரசும் ஆட்சியில் இருக்க அருகதையற் றவை.

மணிப்பூர் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, ஆட்சியில் இருப் போர் தலைகுனிந்து, பதவி விலக வேண்டும். ஆனால் செய்ய மாட் டார்கள். 

மனசாட்சி இருந்தால் தானே நடவடிக்கை எடுப்பார்கள். தாய் நாடு என பெருமை பேசும் பா.ஜ.க. அரசு, பெண்களுக்கு பாது காப்பற்ற நிலையை உருவாக்கி யுள்ளது.

இது அரசியல் இல்லை. தலைமுறையினரின் பாதுகாப்புக் காகத்தான் பேசுகிறேன். தேர்தலுக் காக நிகழ்த்தப்பட்ட கலவரங் களில், நியாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கனிமொழி பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *