தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசு கி.வீரமணி, தமிழ்நாட்டில் திராவிட சித்தாந் தம் குறித்த கருத்தியல் விவாதம் மற்றும் அரசியல் மற்றும் சமூகநீதிக்களத்தின் மய்யப்புள்ளியாக திகழ்கிறார்.
கி. வீரமணியின் வாழ்க்கை தமிழ்நாட்டு அரசியலுக்கு இணையாக சென்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கங் களின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி ஆவார்.
தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.’திராவிட கொள்கை தொடர்பாக பா.ஜ.க உடன் கொள்கை ரீதியாக விவாதத்திலும், அரசியல் ரீதியான மோதலிலும் ஈடுபட்டுள்ள நிலையில், சமூக சீர்திருத்தவாதி தந்தைபெரியாரால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம் அதன் போக்கில் சிலவற்றை உத்தரவிடுகிறது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோருடன் அரசியல் பணியாற்றிய கி.வீரமணி, “சமூக நீதி, சமத்துவம், தொழில்மயமாக்கல், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியது எது என்றால் அறிவியல் சிந்தனையில் நாம் பின்பற்றும் திராவிட அரசியலால்தான் அதெல்லாம் சாத்தியமானது” என்கிறார்.
அறிவியல் சிந்தனையை மதத்திற்கோ அல்லது இந்து மதத்திற்கோ எதிரானது என்று குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. இந்து மதத்திற்கு எதிரானது என்று தி.மு.க மீது அதன் எதிரிகளால் அடிக்கடி குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. “நாங்கள் எங்களுடைய மக்களுக்கு எதிரானவர்கள் என்று எங்களுடைய எதிரிகள்தான் கூறுவார்கள். பார்ப்பனர்களுக்கு எதிராக எங்களிடம் எதுவும் இல்லை. ஆனால், ‘பிராமணியம்’ மற்றும் ‘பிராமண’ சக்திகளுக்கு எதிராக எங்களிடம் ஏதோ இருக்கிறது. நமது ‘பிராமண’ எதிர்ப்பு என்பது மனிதாபிமானமாக இருப்பதுதான். ‘பிராமண ஆதிக்கம்’ என்ற வார்த்தையை பெரியார் கொண்டு வந்தார். அதுதான் இன்றும் நாட்டை நடத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளின் ஜாதியைப் பார்த்தால் உண்மையாக இருக்கிறது.
சில எதிர்ப்பாளர்கள், திராவிடர் கழகம், தி.மு.க.வின் சித்தாந்தத்தை நிர்ணயிக்கிறது என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செல்வாக்கைக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச தத்துவம் கொண்ட ஒரு ரகசியக் குழு. அதே நேரத்தில் நாங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறுகிறோம். எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. பெரியார் உயிருடன் இருந்தபோது, எந்தப் போராட்டமோ, பொது நிகழ்ச்சியோ நடந்தால், காவல்துறையிடம் சென்று நேரத்தையும் இடத்தையும் சொல்லச் சொல்வார். நாங்கள் அதிகபட்சம் ஒரு அழுத்தக் குழுவாக இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க-வுக்கு பொறுப்பாளராக இருக்கிறது. நாங்கள் தி.மு.க-வுக்கு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. திராவிடர் கழகத்துக்கும் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் பொதுவான ஒரே விஷயம், இரண்டு இயக்கங்களும் தேர்தலில் போட்டியிடுவதில்லை.” என்று கி.வீரமணி ஆர்.எஸ்.எஸ். குறித்து வாதங்களை வைத்தார்.
மேலும், “பிராமணியம் மீதான எங்களுடைய விமர்சனம் வெறுப்பின் அடிப்படையிலானது இல்லை. ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்குச் செய்வதைப்போல நாங்கள் ‘பிராமணர்’களுக்குச் செய்வதில்லை.” என்று கி.வீரமணி கூறினார்.
கி.வீரமணி பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். அதன் விளைவாக, அவர் சிறுவனாக இருந்தபோது சாரங்கபாணி என்ற அவருடைய பெயரை மாற்றி வீரமணி என்று பெயரிடப்பட்டார். சிறுவன் வீரமணியை முதன்முதலில் பெரியாருக்கு அறிமுகப்படுத்தியவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன் என்ற ஆ.திராவிடமணி. சுப்பிரமணியன் தனது மாணவர்களிடம் பெரியாரைப் பற்றியும், அப்போது பிரபலமடைந்து வந்த அவரது சிந்தனைகளைப் பற்றியும் கூறினார். திராவிட சிந்தனையைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றிய பேச்சுப் போட்டியில் அவர்களை பயிற்றுவித்தார்.
கி.வீரமணி 10 வயதாக இருக்கும் போது, 1944ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிடர் கழகத்தின் கடலூர் மாநாட்டில் பேச தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பேச்சில் பார்வையாளர்களாக இருந்த பெரியாரும் அண்ணாவும் ஈர்க்கப்பட்டனர். அந்த மாநாட்டில் அவருக்குப் பிறகு பேசிய அண்ணா, ‘இந்தக் குழந்தை பகுத்தறிவுப் பாலைக் குடிக்கிறது, பார்வதியின் பால் அல்ல’ என்று கூறியதை கி.வீரமணி நினைவு கூர்ந்தார்.
விரைவில், சாரங்கபாணி திராவிடர் கழகத்தின் மிகவும் பிரபலமான பேச்சாளர்களில் ஒருவராக ஆனார். திராவிடர் கழகத்தின் எண்ணங்களையும் செய்திகளையும் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார். “பொதுக் கூட்டங்களின் சுவரொட்டிகளும் நோட்டீஸ்களும் என்னை ‘கடலூர் மாநாட்டில் பேசிய குழந்தை’ என்று குறிப்பிடுகின்றன” என்று வீரமணி சிரித்துக்கொண்டே கூறுகிறார். அத்தகைய போஸ்டர்களை பிரேம் செய்து இன்னும் பாதுகாத்து வைத்திருப்பதைக் காட்டினார்.
அவர் தனது ஆசிரியர் உட்பட மற்ற திராவிடத் தலைவர்களைப் போலவே இந்து மதத்தின் அடையாளங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள ‘வீரமணி’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். 1943 வாக்கில் பெரியாரின் நீதிக்கட்சியும் திராவிடர் கழகம் என்ற பெயரைப் பெற்றது. வீரமணி திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு, சிறிது காலம் ஆசிரியராக இருந்தார். பின்னர், சட்டப் படிப்புக்காக சென்னைக்குச் சென்றார்.
1949இல் அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தி.மு.க-வை நிறுவினார். பல தலைவர்கள் அண்ணாவின் வாதங்களால் ஈர்க்கப்பட்டார்கள் என்றும், ஆனால், கி.வீரமணி போன்ற சிறிய அளவில்தான் திராவிடர் கழகத்துக்கு ஆதரவாக நின்றார்கள் என்றும் வீரமணி கூறுகிறார். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பழக்க வழக்கங்கள் தொடர்பாக பெரியாரின் கடுமையான விதிமுறைகளைப் பற்றி கி.வீரமணி, “அது எப்போதும் எளிதானது அல்ல.” என்று கூறுகிறார்.
உலகம் பெரிய அளவில் துருவமயமாகி வரும் நிலையில், பெரியாரின் நெகிழ்சியான செய்தியை வீரமணி குறிப்பிடுகிறார். பெரியாரைத் திணிக்க வேண்டாம் என்று நினைவூட்டுகிறார்.
இன்னும் கணிசமான அளவில், கி. வீரமணி திராவிடர் கழகத்தின் பங்களிப்புகளை தேசத்தை கட்டியெழுப்ப உதவுவதாக பட்டியலிடுகிறார். மாநில அரசுகள் ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை உருவாக்க அனுமதிக்கும் சட்டத்தில் மாற்றங்களை உறுதிப்படுத்துகிறது.
கி.வீரமணி, பெரியாரின் பொருள் மற்றும் அறிவு சார் மரபு இரண்டையும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள், வைக்கப்பட்டாலும் அவற்றை எளிதாகக் கடந்து செல்கிறார்.
தமிழ்நாடு அரசியலில் மூத்த தலைவர். அவருடைய சமகாலத்தவர்கள் “அவர் எதற்காகவும் வருத்தப்படவில்லை” என்று கூறுகிறார்கள்.
– சரவணா ராஜேந்திரன்