அகவையில் தொண்ணூத்தி ரெண்டு
ஆற்றலில் வாலிபக் கன்று
இளமையில் கொள்கைக் குன்று
ஈரோட்டுப் பாதையில் கலந்ததுண்டு
உழைப்பில் அதிக கவனமுண்டு
ஊக்கத்தில் உணர்வைக்கொண்டே
எண்ணிலடங்கா உழைப்பில் வெற்றி கண்டு
ஏற்றமுள்ள பகுத்தறிவால் களம் கண்டு
ஐயமறியா வாழ்வில் ஆக்கம் கொண்டு
ஒற்றுமை வழியில் உலகை உயர்த்திட
ஓங்கு புகழில் அய்யாவின் பணியாற்றிட
வாழ்க பல்லாண்டு! வளமுடன் நூறாண்டு!!
அன்புடன்
முனைவர் க. கிருஷ்ணமூர்த்தி
அழகப்பா பல்கலைக்கழகம்.