சுயமரியாதை நாள் – அயலகத் தமிழர்கள் பார்வையில்…

Viduthalai
3 Min Read

தலைவர்கள் போற்றிய தலைவா வாழ்க!
தந்தை பெரியாரின் நம்பிக்கை ஒளியே
மணியம்மையாரின் பாச மகனே
அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியே
கலைஞரின் பாதுகாப்புக் கேடயமே
வி பி சிங் போற்றிய சிந்தனைச் செல்வரே
சந்திரஜித் யாதவின் உடன் பிறப்பே
தவத்திரு அடிகளாரின்” தமிழர் தலைவரே”
அமெரிக்க அம்மையார் வர்ஜீனியா கர்சனரின்”அன்பு மகனே”
மனித நேயத் தலைவர் பால் கர்ட்சின் “அன்பு நண்பரே”
அமெரிக்க மனிதநேய அமைப்பின்
ராய் செப்கார்ட்டின்”வாழ் நாள் சாதனையாளரே”
மற்றும் பலர் போற்றும்
பாசமிகு தலைவரே
எங்களுக்கு நீங்கள்
உங்களுக்கு நாங்கள்!
உறவின் உச்சம் இது
வரலாற்றின் எச்சம்!
வாழ்க நீவிர்!
எங்கள் மகிழ்வே உங்கள் வாழ்வு!
வாழ்க பல்லாண்டு! வாழ்க வாழ்கவே!

– சோம. இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு.

– – – – –

கொள்கைக் கூட்டம்!

கி.வீரமணி, வாழ்த்து
நான் படித்த பள்ளி தூய தாவீது மேல்நிலைப்பள்ளி. அப்பள்ளி அதன் 270 ஆவது ஆண்டினை கொண்டாடிய போது, ஆசிரியர் அவர்களைத் தன் மாணவனாகக் கொண்டதைப் பெருமையுடன் பறைசாற்றியது!
அதே பள்ளி அதன் 300 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய போது, ஆசிரியர் அவர்களை முதல் பக்கத்திலேயே அப்பள்ளியின் மாணவர் என்றும், சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்து வாழ்பவர் என்றும் குறிப்பிட்டு மகிழ்ந்தது.
அப்பள்ளிக்கு மட்டுமல்ல, கடலூர் மாநகரத்திற்கே பெருமையாகக் காலத்தால் போற்றப்படுபவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் அய்யா அவர்களுடன் உரையாடி இருக்கின்றேன். என் பெயரை உச்சரித்து மனதில் சேமித்து வைத்துள்ளார் என்பது என் பெருமை.
தலைவர் கலைஞர் அவ்வப்போது திடலுக்குச் செல்வார். ஏன் எனக் கேட்ட போது பாம்பு கடிபட்ட கீரி பச்சிலையைத் தேடி ஓடுவதைப் போல, நான் திடலுக்குச் சென்று வந்தால் என் மனம் நிம்மதி அடையும் என்பார்.
இங்கே திடல் என்பது இடப்பெயர் அல்ல இடவாகுபெயர். ஆசிரியர் கொள்கைக் கூட்டத்தைக் கொண்டிருப்பதால் தான் அது பெரியார் திடல்! அதனை இன்றும் வழி நடத்தும் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

– நரசிம்மன்
அமைப்பாளர், திமுக அயலக அணி, சிங்கப்பூர்.

– – – – –

கி.வீரமணி, வாழ்த்து

உங்களின் 92ஆம் பிறந்த நாளில் வாழ்த்துவதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றோம். தொலைநோக்குப் பேராற்றல், சிறந்த வழிகாட்டுதல், மக்கள் மீது அக்கறை கொண்ட, ஊக்கமளிக்கும் தலைவராகவும் பெரியாரின் சிந்தனைகளை உலக முழுவதும் பரப்புவதில் வெற்றி பெற உங்கள் வழிகாட்டுதல் மிகவும் தேவை என்று இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

– Dr M.Govindasamy AISP., PhD
President. Periyar International Network. Malaysia.
President, Association of Agricultural Executives- Sabah.

– – – – –

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நன்நாள் இனிய வாழ்த்துகள்

அன்பின் ஊற்றே..!
அறிவே வாழ்க!
பண்பின் உயர்வே,
பேராற்றலே வாழ்க!
பெரியாரின் உயர் கொள்கையை நிலைபெறச் செய்யும்
துணிவே வாழ்க!
இயக்கத் தொண்டர்களை மதித்துப் போற்றும் மாண்புக்குரிய தோழமையே வாழ்க!
10 வயது முதலாக, பெரியாரின் கரம் பற்றி கொள்கை பிரச்சாரத்தோடு, இன்றுவரை களப்பணியாற்றிவரும் உழைப்பே வாழ்க!
மானமும், அறிவும் மாந்தர்க்கு அழகு!
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரமே; பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் என்பதை உணர்த்தும் உயர்வே வாழ்க!
தந்தை பெரியார், மலேசிய மண்ணுக்கு இரு முறை – 1929- 1954இல் வருகை தந்து மலேசிய திராவிட மக்களுக்கு, பகுத்தறிவுச் சிந்தனயை – சுயமரியாதை உணர்வை ஊட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றார்.
அதன் பின்னர்; 1966ஆம் ஆண்டு துவங்கி, தொடர்ந்து சுமார் 15 முறை, தாங்கள் மலேசியாவுக்கு வருகை தந்து
கழக மாநாடுகள்;
கருத்தரங்குகள்;
பெரியார் விழாக்கள்;
சமூக இயக்கங்களின் பொது விழாக்கள்;
சுயமரியாதைத் திருமணங்கள்;
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு;
திருக்குறள் வாழ்வியல் மாநாடு போன்றவற்றில் கலந்து கொள்கைப் பிரச்சாரத்தின் வழி தமிழ் மக்களின் அறிவுப்பசியை போக்கிவைத்த எங்களின் பேராசான், பெருந்தலைவர் நீங்கள். வரும் 2-12-2024இல் தாங்கள் 92 ஆம் அகவையை இனிதே தொடர்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் திருநாளாகும்.
தாங்கள், பெரியாரின் அகவையைத் தாண்டி பெருவாழ்வு வாழ்கவென பெருமனதோடு விழைகின்றோம்.
தங்கள் வாழ்வு நலத்துடன் வளம் பெறுக!
மக்கள் அறிவுவழி சிறக்க,
துயர் வாழ்வு போக்க
தொண்டறம் தொடர்க!

அன்புடன்,
கழகத் தொண்டன் இரெ.சு. முத்தையா
(மேனாள் தேசியத் தலைவர்
மலேசியத் திராவிடர் கழகம்)
மதியுரைஞர், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *