1943இல் திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் முதல் நாளை ‘திராவிட மாணவர் கழகப் போராட்ட நாளாகக்’ கடைப்பிடிக்கத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 2021ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்கள்.
அதன்படி டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு ஊரிலும் அவரவர் பகுதிகளில், கழக அலுவலகங்களில் மாணவர் கழகத் தோழர்கள் கழகக் கொடி, கருஞ்சட்டையுடன் கூடி தமிழர் தலைவர் வழங்கிய பத்து உறுதிமொழிகளையும், ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இரா. செந்தூரபாண்டியன்,
மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்
குறிப்பு: உறுதிமொழிகளை www.dravidarkazhagam.in/uruthimozhi பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.