புவனகிரி, நவ.30 திருவொற்றியூர் கழகத் தோழர் சேகரின் தாயார் மற்றும்கழக மகளிர் அணியை சேர்ந்த தமிழரசி சேகர் மாமியார் வேதவல்லி மாரிமுத்து (வயது 83) புவனகிரி அருகில் உள்ள பூதவராயன் பேட்டையில் நேற்று (29.11.2024) பிற்பகல் 2.30 மணி அளவில் மறைவுற்றார். அவரின் கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டன. அவரின் உடல் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது
இன்று (30.11.2024) காலை 11 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் கழகப் பேச்சாளர் புலவர் இராவணன், குறிஞ்சிப்பாடி கழகத் தலைவர் தா. கனகராசு வடலூர் கழக துணை நிர்வாகி தீன மோகன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் கழக சொற்பொழிவாளர் யாழ். திலீபன் ஆகியோர் அவரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.