ரஷ்ய நாட்டில் மனிதன் பூமியிலிருந்து சந்திரனுக்குத் தாவிச் செல்லும் முயற்சியில் விண்வெளியில் மிதந்து பூமியையும் 20 தடவைக்கு மேல் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்தார்கள் என்ற செய்திகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம்; ஒரு பெண்ணும் போய் வந்தார் என்ற செய்தியும் கண்டோம்; நாம் என்ன செய்கிறோம்? சாமிக்குக் கல்யாணம் செய்கிறோம். அவ்வாறு செய்யலாமா? சாமியைத் தூக்கிக்கொண்டு போய் வைப்பாட்டி வீட்டிற்குச் கொண்டு போய் விடுகிறோம். விடலாமா?
பிறகு 5 வேளை 6 வேளை சோறு படைக்கிறோம். படைக்கலாமா? இதுவெல்லாம் எதற்கு என்று கேட்டால், “உனக்கு ஒன்றும் தெரியாது; நம் முன்னோர்கள் சொன்னார்கள்” என்று மடப்பசங்கள் சொன்னதையெல்லாம் இன்னமும் கேட்டுக் கொண்டு இருந்தால் நாம் முன்னேறுவது எப்பொழுது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’