1.12.2024 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை நாள் முன்னிட்டு
பெரியார் மருத்துவ குழுமம் சார்பில்
மார்பகம், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச கண் சிகிச்சை சிறப்பு பொது மருத்துவ முகாம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனை மற்றும் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹெலன்கெல்லர் அரிமா சங்கம் மாவட்டம் 342எப், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,திருச்சி பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ரோஸ் கார்டன் இலவச புற்றுநோய் அறக்கட்டளை, ஹர்சமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை இணைந்து நடத்தும் மார்பகம், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச கண்சிகிச்சை, சிறப்பு பொது மருத்துவ முகாம்.
நேரம்: காலை 9 முதல் மதியம் 1 மணி வரை,
இடம்: முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி வளாகம், திருவெறும்பூர், திருச்சி.
தலைமை:
மருத்துவர் ஆர்.கவுதமன் இயக்குநர்,
பெரியார் மருத்துவக் குழுமம்
முகாமை துவக்கி வைப்பவர்:
கே.எஸ்.எம். கருணாநிதி, தாளாளர்,
முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி,
மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர்
முன்னிலை: தொழிலதிபர் எம்.ரவீந்திரன், ந.ப.மா.மனோகரன், தாளாளர், பரிமணம் தொடக்கப்பள்ளி, ஞா.ஆரோக்கியராஜ், (திருச்சி மாவட்ட தலைவர்), தினேஸ்குமார், திருவெறும்பூர் ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர், தி.மு.க.
கலந்து கொள்ளும் மருத்துவர்கள்: மரு.சி.தியாக ஆர்த்தி, பெண்கள் மற்றும் குடும்ப நல மருத்துவர், மரு.ஆர்.சுகுமாறன், அரசு பொதுநல மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர், மரு.எம்.புஷ்பா, பொது நல மருத்துவர், மரு. டி.எஸ். சீனிவாசன், சர்க்கரை நோய் நிபுணர், மரு.கோவிந்தராஜ் வர்தணன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், மரு.சசிபிரியா, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர்.
(முகாமில் பங்கேற்போர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்)
தொடர்புக்கு 86176 31934, 88387 47201