கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கடும் மழை, வேகமான காற்று, புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பதுபற்றி திட்டவட்டமாகக் காலத்தைக் கணிக்க இயலாத இயற்கைப் பேரிடரில் மக்களுக்கு உதவிட நமது ‘திராவிட மாடல்’ அரசும், முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் அனைவரும் முழுவீச்சில் களத்தில் இறங்கி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்து வருவதும் வரவேற்கத்தக்கது.
நமது இயக்கச் சார்பில் தலைநகர் சென்னை தொடங்கி எங்கெங்கெல்லாம் தேவை உள்ளதோ, வாய்ப்பு உள்ளதோ, அங்கெங்கெல்லாம் உணவு, குடி தண்ணீர் போன்ற உதவிகளைச் செய்வதில் நமது கொள்கைக் குடும்ப உறவுகள் முழு மூச்சோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தொண்டாற்றுமாறு அன்புடன் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை
30.11.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
பெரியார் தொண்டறம் உதவி எண்கள்:
சென்னை – 90033 19806 வெளியூர் – 87543 65832