மதுரை, நவ.29 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை மறு சீரமைக்கும் விதமாக புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால் இதன் தரம் கேள்விக்குறியாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், பாலத்தின் உறுதி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ரயில்வே துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
தென்னியாவின் பொறியியல் அதிசயமாக பாம்பன் பாலம் இருந்து வந்தது. ஆனால் இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் தற்போது சேதமடைந்து இருந்தது. எனவே, மாற்று பாலத்தை கட்டும் பணியில் ரயில்வே துறை தீவிரமாக இறங்கியது. பாலம் ஒருவழியாக கட்டி முடிக்கப்பட்டு சோதனை ரயிலும் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில் 27.11.2024 அன்று ரயில்வே துறை அதி காரிகள் பாலத்தை ஆய்வு செய் திருந்தனர். இந்த ஆய்வில் பாலத்தின் தரம் குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதனை சுட்டிக்காட்டி, ரயில்வே துறையிடம் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில், “பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான ஆர்.டி.எஸ்.ஒ. RDSOவின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் . பாம்பன் பாலம் 1914 இல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக் கப் பட்டுள்ளது. இந்த கட்டு மானத்தில் நடந்துள்ள மோச டியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்– – என்று பதிவிட்டுள்ளார்.