மேனாள் இந்திய பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் 16ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 27.11.2024 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அழைப்பில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் இளை ஞரணி தோழர் எ.கண்ணன் ஆகியோர் வி.பி.சிங் அவர்களின் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் கருப்பசாமி, ஆறுமுகம், தசரதன், மணி சுமதி, தமிழ் மதி, கார்த்திக்,ஜெயா, அரிதாஸ், சூரிய தாசன், பிச்சை மணி, கோபி (காங்) ஆகியோர் கலந்து கொண்டனர்.