வைக்கம் நிலைமையைப் பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றி செல்லலாமென்று மகாராணியார் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால் அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று வீதிகளில் தீண்டாதார் செல்வதற்கு மட்டுமே கட்டளை பிறப்பிக்க சமஸ்தான அரசாங்கத்தார் செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மற்ற சமஸ்தானங்களுக்கும் வழிகாட்டியா யிருக்கும் பெருமை திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு கிடைக்காமலே போய் விடுமோவென அய்யுறுகிறோம். சத்தியாக்கிரஹிகளின் கடமை என்னவோ தெளிவாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத்தையும் அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவர வேண்டும்.
– குடிஅரசு – செய்தி – 21.06.1925
வைக்கம்
Leave a Comment