காரைக்குடி கழக மாவட்ட தோழரும், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவருமான வீ.பாண்டியராஜன் (வயது89) இன்று (29.11.2024) அதிகாலை மறைவற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். காரைக்குடி கழக மாவட்ட நிகழ்வுகளுக்கு பெருமளவில் நன்கொடை அளித்து ஆதரவாக இருந்தவர். இவரது குடும்பத்தில் நான்கு பேர் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்கள். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு காரைக்குடியில் நடைபெற்றது. காரைக்குடி மாவட்ட கழக தோழர்கள் காப்பாளர் சாமி திராவிடமணி தலைமையில் இறுதி மரியாதை செலுத்தினர்.
• • • • •
கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றிய கழகம் உம்பளாபாடி திராவிடர் கழக பொறுப்பாளரும், பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை உறுப்பினரும் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளருமான சா.வரதராஜன் அவர்களுடைய இளைய மகன் கிட்டு என்கிற வ.லெனின்(வயது30) நேற்று (28.11.2024) மதியம் இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு இன்று (29.11.2024) மாலை உம்பளாபாடியில் நடைபெற்றது.