கோவை, நவ. 29- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 24.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில் சுந்தராபுரம் கண்ணப்பன் அரங்த் தில் மாவட்ட ப.க தலைவர் வழக்குரைஞர் பெ.சின்னசாமி தலைமையில் ப.க மாவட்ட துணை செயலாளர் மா. ஆனந்தராஜ் வரவேற்புரையாற்ற கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ. பிரபாகரன், மாநகரத் தலைவர் தி.க. செந்தில்நாதன், மாநகர செயலாளர் புலியகுளம் க. வீரமணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.கலைச்செல்வி, பகுதி பொறுப்பாளர் குமரேசன் ஆயோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பழ. அன்பரசு, மாவட்ட ப.க அமைப்பாளர் எட்டிமடை நா.மருதமுத்து மாநகர் ப.க அமைப்பாளர் சூசைராசு, ப.க ஒத்தக்கால்மண்டம் நகராட்சி தலைவர் சிவக்குமார், மா.ரமேஷ் ப.க, கழக இளைஞரணி செயலாளர் சா. இராசா ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து கருத்துகளை தெரிவித்தார்கள்.
கூட்டத்தில் திராவிடர் கழக தோழர்கள் திலகமணி, கருணா ஆனந்குமார், ந.குணா, சுப்பையா, தி.க.வெற்றிச்செல்வன், இரா. இரு தயராஜ், தி.க.வெங்கிடு மற்றும் ம. நீலகிரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மாநில ப.க தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியதாவது, வருகிற டிசம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் அகில இந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பு மனிதநேயர்கள் 13ஆவது மாநாடு குறித்தும் மாநாட்டினை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் குறித்தும், மாவட்டத்திலிருந்து குடும் குடும்பமாக பெருந்திரளாக மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டினை சிறப்பிக்குமாறும், பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் 2022 ஆண்டு நடைபெற்ற 12ஆவது FIRA மாநாடு குறித்தும் நினைவுகூர்ந்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து ப.க மாநில அமைப்பாளர் தரும.வீரமணி தந்தை பெரியார் 1970இல் பகுத்தறிவாளர் கழகம் ஏற்படுத்தபட்டதின் நோக்கம் குறித்தும் அறிவியல் மனப் பான்மையினை மாணவர்களிடையே பரப்புவதற்கான வாய்ப்பு ஆசிரி யர்களுக்கு அதிகமாக உள்ளதால் ஆசிரியர்களை அடையாளம் கண்டு பெருமளவில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சிகளை தோழர்கள் மேற்கொள்ளவேண்டும் எனவும்,
தந்தை பெரியாரை உலகமயம் ஆக்குவதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலின்படி செயல் படுவதற்கு உறுதியேற்போம் எனவும் பேசினார்.
கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவிற்கு குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டு பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல், விடுதலை, உண்மை, தி – மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு ஆகியவற்றிற்கு சந்தா வழங்குவ தெனவும்,
12.12.2024இல் வைக்கத்தில் நடைபெறும் நூலகம் திறப்பு விழாவிற்கு கோவை மாவட்டத்தில் இருந்து 100 பேருக்குமேல் கலந்து கொள்வதெனவும்,
வருகிற டிசம்பர் 28, மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பகுத்தறிவாளர் கழக சங்கங்களின் 13ஆவது மாநாட்டிற்கு நிதி திரட்டுதல், பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்து மாநாட்டில் பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.