ஆத்தூர், நவ. 29- ஆத்தூர், சேலம்,மேட்டூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 23.11.2024 மணி அளவில் ஆத்தூர் ராஜ் கிருஷ்ணா ரெசி டென்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக ஆத்தூர் மாவட்டத் தலைவர் வ.முருகானந்தம் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். கோவி.அன்புமதி பகுத்தறிவாளர் கழக மேட்டூர் மாவட்டத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கமான பகுத்தறிவாளர் கழகம், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(FIRA) இணைந்து நடத்தும் மாநாடு திருச்சியில் டிசம்பர் 28,29 தேதிகளில் நடைபெறும்.அந்த மாநாட்டிற்கு ஆத்தூர்,சேலம்,மேட்டூர் மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும், என்றும் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் நிதி திரட்டி வழங்கிட வேண்டும் என்றும், உலக அளவிலான இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.நாம் அதை செவ்வனே சிறப்பாக செய்ய உறுதி ஏற்க வேண்டும் என்றும், மாநாட்டு சிறப்புகள் குறித்தும் மாநாட்டின் பணி குறித்தும் நாம் எவ்வாறு அதை செயல்படுத்த வேண்டும் என்றும் , முதலில் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மாநாட்டிற்கு தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். விரிவான விளக்க உரையை நிகழ்த்தினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் வி.மோகன் திருச்சியில் நடைபெறும் மாநாடு குறித்தும் ,மாநாட்டிற்கு பஞ்சாப் மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வருகை புரிகிறது. அவர்களை வரவேற்க வேண்டும் என்றும், மாநாட்டை சிறப்படைய செய்ய நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பதை விளக்கினார்.மேலும் மூன்று மாவட் டங்களும் மாதத்திற்கு ஒருமுறை கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் கருத்துரையில், திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறி்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு குறித்தும், மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகத்தின் கடமைகளும்,செயல்பாடுகளும் குறித்து பேசினார். பகுத்தறிவாளர் கழகம் புத்துணர்ச்சியோடு கட மையாற்றுகிறது. மாநாட்டை சிறப்பாக வெற்றியடைய செய்வீர்கள் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் நம்புகிறார். ஆகவே மாநாட்டை வெற்றி அடையச் செய்வோம்.தொடர்ந்து விடுதலை,உண்மை,பெரியார் பிஞ்சு,தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தா பெருமளவில் திரட்டி தருவோம் என்று கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா. தமிழ்பிரபாகரன்,மாரி கருணாநிதி மாநில கலை ஊடகப்பிரிவு அவர் களும், திருச்சி மாநாடு குறித்து கருத் துரையாற்றினர்.
சி.மதியழகன் பகுத்தறிவாளர் கழக மேட்டூர் மாவட்டச் செயலாளர், ஆ.அறிவுச்செல்வம் பகுத்தறிவாளர் கழக ஆத்தூர் மாவட்டச் செயலாளர்,ச.சுரேஷ் குமார் பகுத்தறிவாளர் கழக சேலம் மாவட்ட செயலாளர்,கோ.கல்பனா சேலம் மாநகர செய லாளர். க.வேல்முருகன் மேட்டூர் பகுத்தறிவாளர் கழகம். இரா.கண்ணன் மேட்டூர் பகுத்தறிவாளர் கழகம். அ.அருண்குமார் பொறி யாளர் பகுத்தறிவாளர் கழக ஆத்தூர் மாவட்ட துணைச் செயலாளர், பி.பழனிவேல் பகுத்தறிவாளர் கழக ஆத்தூர் மாவட்ட அமைப்பாளர் ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக பெ.முரளி,முனைவர் கு.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக அமைப்பாளர் கா.நா. பாலு, மாவட்டக் காப்பாளர் ஏ.வி.தங்கவேல்,ஆத்தூர் கழக மாவட்டத் தலைவர் தா.வானவில், மாவட்டச் செயலாளர் நீ.சேகர், சேலம் கழக மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்ட செயலாளர் சி.பூபதி, மு.விசயேந்திரன் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர், பி.நடராஜன் பகுத்தறி வாளர் கழக பெரம்பலூர் மாவட்ட தலைவர், கே.செல்வம் ஆத்தூர் இளைஞர் அணி கே.ராஜி சேலம் கழக தோழர்கள் அரங்க இளவரசன், அ.இ.தமிழர் தலைவர், இரா.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஆத்தூர் பகுத்தறிவாளர் கழ கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை பயிற்சி நடத்தி முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து தீர்மானம் ஏற்றப்படுகிறது.
பகுத்தறிவாளர் கழகம்,இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மாநாட்டிற்கு டிசம்பர் 28 29 தேதிகளில் திருச்சியில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்றும் நிதி திரட்டி தருவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டம் தோறும் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம் நடத்த தீர் மானிக்கப்பட்டது.
ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் ச.வினோத்குமார். மாவட்டத் துணைச் செயலாளர் பொறியாளர் சி.அருண்குமார், மாவட்டத் துணை அமைப்பாளர் ஆசிரியர் கா.பெரியசாமி. ஆத்தூர் நகரத் தலைவர் ஆசிரியர் முனைவர் கு.பிரகாஷ், ஆத்தூர் நகரச் செயலாளர் ஆசிரியர் பெ.முரளி ஆகியோர்களுக்கு பொறுப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தா பெருமளவில் திரட்டி தர தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக நன்றி உரை பகுத்தறிவாளர் கழக சேலம் மாவட்டச் செயலா ளர் ச.சுரேஷ்குமார் நன்றி உரை யாற்றினார்.