புதுச்சேரி, நவ.29- திராவிடர் இயக்க வரலாற்றைத் தொகுத்து எழுதக் குழு அமைக்கவும், திருச்சி பகுத்தறிவாளர் சங்க கூட்டமைப்பின் மாநாட்டில் தனிப் பேருந்தில் பங்கேற்கவும் புதுச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த 23.11.2024 அன்று மாலை பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கடவுள் மறுப்பு உறுதிமொழியை இளைஞரணித் தலைவர் தி.இராசா கூறினார். பின்னர் கழகத் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆடிட்டர் கு.இரஞ்சித் குமார் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினார்.
தொடர்ந்து மாவட்டச் செயலாளர் கி. அறிவழகன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், திராவிடர் தொழிலாளரணி செயலாளர் கே.குமார், கழக இளைஞரணி தலைவர் தி. ராசா ஆகிய தோழர்கள் கருத்துரையாற்றினார்கள்.
பகுத்தறிவாளர் கழக செயலாளர் பா. குமரன், ஜே. வாசுகி, திராவிடர் கழக நகர, பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், சா.கிருஷ்ணசாமி, சு.துளசிராமன், பாகூர் இராம.சேகர், கு.உலகநாதன், இரா. ஆதிநாராயணன், இளைஞரணி தோழர்கள் சபீர் முகமது, பெ.அறிவுச்செல்வன், சதீஷ், பெ.ஆதிநாராயணன், பா.சக்திவேல், பெரியார் பெருந்தொண்டர்கள் திருவள்ளுவர் பற்றாளர்
தி. சண்முகம், ஆசிரியர் ஆ.குப்புசாமி, இர.சாம்பசிவம் மற்றும் கழக பேச்சாளர் யாழ் திலிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.கழகத் தோழர்களின் கருத்துரைகளுக்குப்பின்னர் புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், சீரிய பகுத்தறி வாளருமான வீ. கண்ணையன் 20.10.2024 அன்று இயற்கையெய்தினார். அய்யா அவர்களுக்கு ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவையில் அமையும் அறிவு சார் நூலகம், அறிவியல் மய்யத்திற்கு தந்தை பெரியார் பெயரினை சூட்டுவதாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக் கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் டிசம்பர் 2 அன்று குடும்பத்து டன் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது எனவும், அனைவரும் பெரியார் உல கத்திற்கும், ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களுக்கும் சந்தா சேர்த்து வழங்குவது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்க உறுதிமொழி ஏற்பது மற்றும் புதுவையில் ஒரு பகுதியில் சிறப்பாகப் பொதுக்கூட்டம் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு புதுவையில் இருந்து தனி பேருந்தில் திருச்சிக்கு செல்வது எனவும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் திரளான தோழர்கள் கலந்து கொள்வது மாநாடு தொடர்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவ தெனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதுவையில் நடைபெற்ற எம்.பி.பி.எஸ் இளநிலை மருத்துவ சேர்க்கையில் என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள தவறுகளைக் கண்டிப்பதுடன், உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி அரசை இக்குழு கேட்டுக்கொள்கிறது.
புதுச்சேரி திராவிடர் இயக்க வரலாறுகளை தனியாக எழுதுவதற்கு ஒரு குழு அமைப்பது எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரை பெற்று அதனை நடைமுறைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதுச்சேரி வடக்குப் பகுதி நகர கழகத் தலைவர் மு.ஆறுமுகம் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தனர்.
தோழர் பா.சக்திவேல் புதுச்சேரி பெரியார் படிப்பகம் குளிரூட்டப்பட்ட அரங்கமாக மாற்றுவ தற்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 30,000/- அய் தோழர்களின் பலத்த கரவொலியுடன் மாநிலத் தலைவர் சிவ.வீரமணியிடம் வழங்கினார்.
வந்திருந்த அனைவருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர் கி.அறிவழகன் நன்றி கூறினார்.