வக்பு வாரிய மசோதா கமிட்டி கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கமிட்டி தலைவர் ஜெகதாம்பிகா பால் (BJP) முறையான விவாதம் இன்றி, அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். நாளை 29ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.