டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* சலுகை பெறுவதற்கு மதம் மாறுவது மிகப்பெரிய மோசடி: ஒருவர் தான் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீடு பலன்களை பெறுவதற்கு மதம் மாறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் சமூகத்தின் ஒட்டுமொத்த நோக்கங்களையும் சிதைக்கிறது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு மசோதாவை டிசம்பர் மாதத்தில் சட்டபேரவையில் தாக்கல் செய்ய தெலங்கானா அரசு முடிவு.
* வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி இன்று (28.11.2024) மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.
* மணிப்பூர் பிரச்சினை தொடர்பான பேச்சு வார்த்தையின் போது, ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கினால், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் – மெய்தி குழுவினர் திட்டவட்டம்.
*பங்களாதேசத்தின் தேசிய கொடியை அவமதித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ணதாஸ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இஸ்கான் அமைப்பு ஓர் அடிப்படைவாத அமைப்பு என அந்நாட்டு அரசு அறிவிப்பு.
* அதானி விவகாரத்தில் இரண்டாம் நாளும் நாடாளுமன்ற இரு அவைகளும் அமளி காரணமாக ஒத்திவைப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிரா முதலமைச்சராக பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு. இருப்பினும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் செய்தது போல் வேறு சில பெயர்களும் எதிர்பாராத நிலையில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்.
* பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை திமுக நிராகரித்தது, கைவினைஞர்களை உள்ளடக்கிய திட்டத்தை தமிழ்நாடு அரசே உருவாக்கும் என ஒன்றிய அரசுக்கு கடிதம்.
தி இந்து:
* இஸ்கானை தடை செய்ய வங்கதேச நீதிமன்றத்தில் மனு
– குடந்தை கருணா