டிசம்பர் 2, 2024 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் ஆசிரியர் அவர்களிடம் நேரடியாக ‘பெரியார் உலகத்துக்கு’ கொடைகளை வழங்கி தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற இருக்கும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாட்டுக்கு இதுவரை திரட்டப்பட்ட நன்கொடைகளை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்கள்
ஆ .வெங்கடேசன், வி .மோகன், வா. தமிழ் பிரபாகரன் ஆகியோரிடம் ஒப்படைத்து ஒப்புதல் ரசீது பெற்றுக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
– இரா.தமிழ்ச்செல்வன்
தலைவர், பகுத்தறிவாளர் கழகம்