இராமநாதபுரம், நவ. 28- இராமநாதபுரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 23-11-2024 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் அரண்மனை அருகில் எழுச்சியோடு நடைபெற்றது.
நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி. தலைமையேற்று நோக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான். முன்னிலை வகித்தனர். தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி. மாவட்ட தலைவர் முருகேசன் கருத்துரை வழங்கினர். மேனாள் மாவட்ட செயலாளர் கார்மேகம். பொதுக்குழு உறுப்பினர் கயல்.கணேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இறுதியாக தங்கச்சிமடம் ஒன்றிய தலைவர் குழந்தை ராயர் நன்றி கூறினார்.
கூட்டத்தில், கழக பொதுக்குழு உறுப்பினர் கணேசனின் தாயார் பூரணம் அம்மையார் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிப்பதெனவும், டிசம்பர் 12 கேரளாவில் நடக்க இருக்கின்ற வைக்கம் விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பெருமளவில் பங்கேற்பது எனவும்,
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 92ஆவது பிறந்த நாள் *மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பது.பெருமளவில் விடுதலை சந்தா வழங்குவது எனவும்,
இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும்,
டிசம்பர் 28,29இல் திருச்சியில் நடைபெறுகின்ற இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாட்டில் இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் பெருமளவில் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.