2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5ஜி பயனர்கள் எண்ணிக்கை 97 கோடியாக உயரும் என எரிக்சன் நிறுவனம் கணித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 27 கோடியாக அதிகரிக்கும் என்றும், இந்த எண்ணிக்கை தற்போது பயனில் உள்ள அலைபேசி பயனர்கள் எண்ணிக்கையில் 23% என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.