சென்னை, நவ.27- திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடும், திமுகவும் எப்போதும் நமது மக்களின் பிரச்சினைகளுக்காகவே நிற்கின்றன. நமது இதயங்களுக்கு நெருக்கமான விழாவான பொங்கல் அன்று சி.ஏ.தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நாங்கள் பலமுறை கண்டித்த பிரச்சினையாக மீண்டும் மீண்டும் இருக்கிறது. திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (26.11.2024)ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தேன்.
தற்போது 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்கு தேதி மாற்றப் பட்டிருப்பது எனக்கு நிம்மதியாக இருந்தாலும், நமது கலாச்சார விழுமியங்களை ஒன்றிய அரசு திரும்ப திரும்பக் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இது எப்போதும் எங்களுக்கு மட்டுமே குறிப்பிடவேண்டிய விஷயமாக இருக்கக்கூடாது- உண்மையான ஒத்துழைப்பு அவர்களிடமிருந்து வர வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடும், தி.மு.க.வும் மக்களின் பிரச்சினைக்காக எப்போதும் முன் நிற்கின்றன கனிமொழி பதிவு
Leave a Comment