கஞ்சா விற்பனை அதிகம் சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்

viduthalai
2 Min Read

திருவண்ணாமலை, நவ.27- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனிடையே கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் நடமாட்டம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சாதுக்களுக்கு கியூஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட சாமியார்கள் காவல்துறையினரிடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் கூறுவது சரியாக உள்ளதா என விசாரணை செய்து சரியான விவரங்கள் கொடுத்த சாமியார்களுக்கு ஒளிப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.

சுற்றுச் சூழலுக்கேற்ற மின்சார வாகனப் போக்குவரத்திற்கான முதலீட்டுத் திட்டம்

சென்னை, நவ. 27- சுற்றுச் சூழல் மாசு ஏற்படாதவாறு மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க கோடக் மகிந்திரா அஸட் மேனேஜ்மென்ட் லிட் 25.11.2024 அன்று கோடக் போக்குவரத்து மற்றும் சரக்கு நிதியத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு திறந்த நிலை முதலீட்டுத் திட்டம் ஆகும். போக்குவரத்து மற்றும் சரக்கு கையாள்வதை மய்யக் கருத்தாகக் கொண்ட இத்திட்டத்தில் நவம்பர் 25 முதல் 9 டிசம்பர் வரை முதலீடு செய்யலாம்.

இத்திட்டம் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாள்வது தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்களில் அதிகபட்சமாக முதலீடு செய்து நீண்ட கால மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் போக்குவரத்து உட்கட்டமைப்பு, சரக்கு கையாளும் சேவைகள் மற்றும் சிறந்த போக்குவரத்துக்கான தீர்வுகள் வழங்கும் நிறுவனங்கள், இவற்றுக்கு நிதி உதவி அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் அடங்கும்.

இது குறித்து இந்நிறுவன நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா கூறுகையில், “கோடக் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து நிதியம் தொடங்கியதன் மூலம் இந்தியாவின் வேகமாக மாறிவரும் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து கருத்துருவில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது. வாகன உரிமை மற்றும் மாசுபட்ட இயந்திர இயக்கத்திலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாற்றம் ஆகிய காரணிகளால் இவ்வளர்ச்சி மேலும் வலுப்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *