லெபனானில் இயங்கிவரும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகள் வலியுறுத்தியதின் அடிப்படையில் இஸ்ரேல் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், லெபனான் எல்லையில் உள்ள ராணுவத்தை 60 நாள்களுக்குள் இஸ்ரேல் திரும்ப பெற உள்ளது.