திருச்சி, நவ. 26- 10 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு குவிகிறது.
கூத்தூர் சிறீவிக்னேஷ் வித்யாலயா பள்ளியின் நிறுவனர் விருத்தாசலம் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி, எச்.ரியாசிறீ, பத்து வயதிற்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு,ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் மாநில அளவில் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், மெட்லி ரிலே பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடத்தோடு வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவிக்குப் பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.