சென்னை, நவ.26- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.09.2021 அன்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் ஆண்டிற்கு 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் கீழ்க்கண்ட 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், தொற்று மற்றும் தொற்றா நோய் குறித்த பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சிறு நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
அனைத்து பரிசோதனைகளும் குறிப்பாக இரத்தம், சிறுநீர் போன்றவற்றிற்கு செமி ஆட்டோ அனலைசர் போன்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் அல்ட்ரா சோனோகிராம் மூலம் சிறப்பு பரிசோதனை செய்யப்படுகிறது.
சிறப்பு மருத்துவ சிகிச்சைகள்
1. மகப்பேறு மருத்துவம்
2. குழந்தைகள் மருத்துவம்
3. சிறப்பு பொது மருத்துவம் (தொற்று மற்றும் தொற்றா நோய் சிகிச்சை)
4. இருதய நோய் சிகிச்சை
5. அறுவை சிகிச்சை
6. எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை
7. காது, மூக்கு, தொண்டை மருத்துவம்
8. பல் மருத்துவம்
9. கண் மருத்துவம்
10. தோல் நோய் கிசிச்சை
11. புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை
12. மனநல மருத்துவம்
13. இந்திய முறை மருத்துவம்
14. ICTC சேவைகள்
15. காசநோய் சிகிச்சை
16. முதியோர் மருத்துவம்
17. குடும்ப நல மருத்துவம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மேற்கண்ட நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கும் பரிந்துரை செய்யப்படுகிறார்கள்.
கலைஞரின் வருமுன்
காப்போம் திட்டம்
2021-2022 – இலக்கு – 1250, மொத்த முகாம்கள் -1260, பயனாளிகள்- 9,06,427
2022-2023 – இலக்கு – 1250, மொத்த முகாம்கள் -1532, பயனாளிகள்- 15,08,469
2023-2024 – இலக்கு – 1250 மொத்த முகாம்கள்– 1253, பயனாளிகள்- 12,54,430
2024-2025 – இலக்கு – 1250, 21.11.2024 வரை மொத்த முகாம்கள் – 793 பயனாளிகள் – 8,06,188