தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேருக்கு இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

viduthalai
3 Min Read

ராமேஸ்வரம், நவ.26- தமிழ்நாட்டு மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 3 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கdன்,சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது, கடந்த 9ஆம் தேதி சிறைபிடித்தனர்.

அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த 23மீனவர்களின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து 23 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று (25.11.2024) ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் டிச.3 வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யோகாவா?
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, நவ.26- ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் யோகா, ஆயுா்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை சோ்க்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அலோபதி மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளே இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்திய பாரம்பரியமிக்க ஆயுா்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பிற மருத்துவ முறைகள் அதில் சோ்க்கப்படவில்லை. இவற்றின் மூலம் பல்வேறு வகையான நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்தபோது வெளிநாட்டினா் அறிமுகப்படுத்திய மருத்துவ முறைகளை காலனிய மனோபாவத்தை கொண்டவா்கள் லாப நோக்கத்துக்காக தொடா்ந்து நடைமுறைப்படுத்தி வந்தனா். இதன் விளைவாக இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாச்சாரம் மற்றும் அறிவியல் தத்துவங்கள் மறைக்கப்பட்டன.
எனவே, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, ஆயுா்வேதா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்டவை மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறைகளை ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் சோ்க்க வேண்டும். இந்த திட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் இந்திய மருத்துவத் துறையில் செயல்படுத்தப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தாக்கீது அனுப்பியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் யோகா பயிற்றுநா்களை நியமிக்க மறுப்பு: பள்ளிகளில் யோகா பயிற்றுநா்களை நியமிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக்கோரி வழக்குரைஞா் உபாத்யாய மற்றொரு மனுவை தாக்கல் செய்தாா்.

இதை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, யோகா பயிற்சியை நான் மேற்கொள்பவன் என்ற முறையில், யோகா குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்பதை அறிவேன். ஆனால், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிடாது’ என தெரிவித்தாா். இதையடுத்து, இந்த மனுவை திரும்பப் பெற உபாத்யாயவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *