தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், அ.சம்பந்தம், அ.பாலசுப்ரமணியன், அ.பானுமதி, அ.இராசலெட்சுமி, அ.முத்துலெட்சுமி, அ.இராசேசுவரி ஆகியோரின் மூத்த சகோதரர் அ.மருதையன் நேற்று (24.11.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (25.11.2024) காலை 11 மணிக்கு நெல்லுப்பட்டில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு உடலடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புக்கு – அ.இராமலிங்கம் 8248956580
குறிப்பு: மறைவுச் செய்தியறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கத்தை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
– – – – –
ஆண்டிபட்டி நகர திராவிடர் கழகச் செயலாளர் இரா.ஆண்டிச்சாமி அவர்களின் தாயார் இரா.வீரம்மாள் அவர்கள் 24.11.2024 அனறு காலை 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் இறுதி ஊர்வலம் 25.11.2024 பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.