தூத்துக்குடி மாவட்டக் கழக மகளிரணி மேனாள் அமைப்பாரும், பணிநிறைவு பெற்ற ஆசிரியரும் தனது இறப்புக்குப் பின் தன் உடலைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்குக் கொடையாக வழங்கியவருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகளை இரா.கஸ்தூரிபாய் அவர்களின் 6ஆம் ஆண்டு நிறைவு (26.11.2024) நினைவுநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000த்தை அவரது வாழ்விணையர் மா.பால்ராசேந்திரம் (கழகக் காப்பாளர்), மகன் பா.இராசேந்திரன் (மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர்) ஆகியோர் வழங்கினர்.