அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 21 நாள்களுக்குள் நேரில் ஆஜராகாவிட்டால், தீர்ப்பு அவர்களுக்கு எதிராக உள்ளிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களை பெற ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.