சென்னை, நவ.24 வடசென்னை வளர்ச்சி திட்டத் தின்கீழ் ரூ.1,300 கோடியிலான 80 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.30-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை தங்கசாலையில் ரூ.2,096.77 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 87 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது பல்வேறு துறைகளின் சார்பில் பணிகள் விரிவடைந்து தற்போது ரூ.5,779.66 கோடி மதிப்பீட்டில் 225 திட்டங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் முக்கிய துறைகளின் சார்பில் சுமார் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் 80 புதிய திட்டங்களை நவ.30-ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்து, 29 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான முன்னேற் பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் நேற்று (23.11.2024) நடைபெற்றது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெரு நகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் க.நந்தகுமார், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, “வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், மாதாவரம், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், எழும்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளை மேம்படுத்தும் விதமாக உரு வாக்கப்பட்டதுதான் இந்த வடசென்னை வளர்ச்சி திட்டம்.
வடசென்னையில் சாலை யோரம் வசிக்கின்ற மக்களுக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கும் நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தித்தர வேண்டும். அந்த வகையில், பாதுகாப்பான குடிநீர், சீரான கழிவுநீர் வசதி, தடையில்லா மின்சாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள், போக்குவரத்து வசதி, சமூக உட்கட்டமைப்பு, விளை யாட்டு, திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு வசதி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களைக் கொண்டதுதான் இந்த வட சென்னை வளர்ச்சித் திட்டம்” என்றார்.