சென்னை, நவ. 24- பணி புரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கையர் உள்பட அனைத்து மகளிரும் தமிழ்நாடு போக்கு வரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட் டண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி 2021ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 570 கோடி முறை பெண்கள் இல வசமாக பயணம் செய்துள்ளனர் என்றும், ஒரு நாளில் 57.07 லட்சம் மகளிர் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021இல் பொறுப்பேற்றது முதல் மகளிர் முன்னேற்றத்திற்காகப் புரட்சிகரமான பல திட் டங்களைத் தொடங்கி வெற்றி கரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் முதன்மையான திட்டம் – முதன்முதல் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’. மாநிலத் திட்டக்குழு, திருப்பூர், மதுரை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திரச் செலவில் சுமார் ரூ.888- சேமிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரையில் மூன்றரை ஆண்டுகளில் 570.86 கோடி பயண நடைகள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஒரு நாளில் 57.07 லட் சம் மகளிர் பயணம் மேற் கொள்கின்றனர். 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதில், கடந்த மாதம் வரை 2,578 புதிய பேருந்துகள் வரப்பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வார நாள்களில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், முதல் மூன்று பயணிகள் ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு ரூ.10,000 பரிசும், அடுத்த 10 பயணிகளுக்கு ரூ.2,000 பரிசுத் தொகையும் மொத்தமாக ரூ.50,000 பரிசு வழங்கப்படுகிறது.
“சென்னை பஸ்” செயலிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒன்றிய அரசின் “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருது வழங்கப்பட்டது. வாட்ஸ்அப் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் குறைகளைத் தீர்வு செய்வதற்கான பொறி முறைகளை உருவாக்கி உடனுக்குடன் தீர்வு செய்வதற்காக பயணிகள் மத்தியில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றமைக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தைப் பாராட்டி, 2022ஆம் ஆண்டு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுடில்லியில் வழங்கப்பட்டது. மொத்தமாக இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட விருதுகளில் 25 சதவீத விருதுகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளன.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியின்போது இறந்த பணி யாளர்களின் 766 வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவை அனைத்துப் பிரிவு மக்களாலும் பாராட்டப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.