சென்னை, நவ. 24- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு டிச. 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
குறிப்பாக, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் டிச. 9-ஆம் தேதி தொடங்கி டி.ச. 23-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் டிச.10 முதல் டிச.23-ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று 6,7,8,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வும் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும்.
டிச.24 முதல் விடுமுறை… தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயி லும்மாணவர்களுக்கான தேர்வு டிச.16-இல் தொடங்கி டிச .23-ஆம் தேதி நிறைவடையும். இதைத் தொடர்ந்து, ஒன்றுமு தல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு டிச. 24 முதல் அடுத்த ஆண்டு ஜன.1-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறையா கும். இதற்குப் பிறகு ஜன.2-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.