பணிச்சுமையால் பலரும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோல ஒரே இடத்தில் இடை வேளையின்றி இருப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எதைச் செய்தாலும் இதில் இருந்து தப்ப முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் அசைவுகள் மிகவும் முக்கியம் எனவும், குறைந்தது 45 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடப்பது நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர்.