அமெரிக்காவில் 80 மருத்து வர்கள் 50 மணி நேரமாக முகமாற்று அறுவை சிகிச்சை செய்து டெரெக் ஃபாப் (30) என்பவருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளனர். இது மருத்துவ உலகில் சாதனையாக கருதப்படுகிறது. டெரெக்கால் தற்போது மூக்கு வழியாக சுவாசிக்கவும், திட உணவுகளை சாப்பிடவும், சிரிக்கவும் முடிகிறது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற போது உயிர் பிழைத்த அவருக்கு, இதுவரை 58 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.